களனி பல்கலைக்கழகத்திற்கு 2017/2018 ஆம் கல்வி ஆண்டுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு போலி அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு போலியாக பல்கலைக்கழகத்தின் பெயரில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நுழைவுக் கட்டணம் செலுத்துமாறு அப்போலிக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவ்வாறான கடிதங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் உத்தியோக பூர்வ கடித தலைப்பில் பதிவுத் தபாலில் வரும் வகையில் பல்கலைக்கழகம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவையே உண்மையான கடிதங்கள் என்றும் பதிவாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.