அமெரிக்கா கிரிக்கெட் அணியானது சர்வதேச கிரிக்கெட் சபையின் 105 ஆவது உறுப்புரிமை பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உறுப்புரிமை காணப்பட்டபோதிலும், அந்நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் அவர்கள் காட்டிய ஈடுபாடு குறைவடைந்ததை அடுத்து, அதன் உறுப்புரிமை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய அமெரிக்க கிரிக்கெட் சபையினால் மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நேற்றைய தினம் (08) 105 ஆவது நாடாக குறித்த உறுப்புரிமை வழங்கப்பட்டள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.