பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பாக கொரோனா தடுப்பூசி வழங்க நாங்கள் தயார் – பொது சுகாதார பரிசோதகர் சங்கம்
பாடசாலை மாணவர்களுக்குப் பாதுகாப்பாக கொரோனா தடுப் பூசி வழங்க நாங்கள் தயார் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்தால் தாம் அந்தப் பொறுப்பைப் பாதுகாப்பாக நிறைவேற்றத் தயாராக இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிதற்கு முன்னர் 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாகச் செலுத்த வேண்டும் எனவும் அவர்களுக்கு உரிய தடுப்பூசிகளைச் செலுத்துவது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிகள் தேவையான எண்ணிக்கையில் வழங்கப்பட்டால் குறித்த வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலகுவான முறையில் முழுமையாகச் செலுத்தி இலக்கை அடையாளம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.