அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு
அலோசனைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு முன்வைத்துள்ள அறிக்கையில் ஆசிரியர்கள் அதிபர்கள் சேவையை வரைவிட்ட சேவையாகப் பிரகடனப்படுத்தல் மற்றும் இம்முரண்பாடுகளை தீர்த்து ஆசிரியர் அதிபர்கள் சேவையை கெளரவமான சேவையாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவ்வறிக்கையின் பிரதி (சிங்களம்) இணைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான டலஸ் அலகபெரும, பிரசன்ன ரணதுங்க, விமல் வீரவன்ச, மகிந்த அமரவீர ஆகியோர் முன்வைத்துள்ள இவ்வறிக்கையின் பிரேரணைகளில் சிலவற்றை கீழே தருகிறோம்.
1. ஆசிரியர் அதிபர் சேவையை வரைவிட்ட சேவையாக மாற்றுதல். இதற்கான அமைச்சரவை அனுமதி 2019.12.29 ஆம் திகதி கிடைத்துள்ளது.
(வரைவிட்ட சேவை என்றால் என்ன என்பதை பார்க்க பின்வரும் இணைப்பிற்கு செல்க)
https://teachmore.lk/2019/10/blog-post_66.html
2. 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சு, ஆசிரியர் தொழில் சங்கங்களுடன் கலந்துரையாடி முன்வைத்த பரிந்துரையின் அடிப்படையில் தீர்வுகளை முன்வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. (இணைப்பில், கபில நிறந்தீட்டப்பட்டு காட்டப்படுள்ள பகுதி)
3. ஆசிரியர் சேவையில் 25000 பேரும் அதிபர் சேவையில் 16512 பேரும் ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் கல்வி நிர்வாக சேவையில் சுமார் 5000 பேரும் உள்ளனர். ஆசிரியர் சேவையில் இருந்து செங்குத்து அடிப்படையில் சேவை ஏற்றம் மற்றும் உயர் பதவிகளுக்கு செல்ல முடியுமானது 9 வீதம் மாத்திரமே. எனவே, ஆசிரியர் சேவையைச் சார்ந்தோருக்கு கல்வி மற்றும் வாண்மை விருத்தியை மையப்படுத்தி கொடுப்பனவு அல்லது வேறு சம்பள ஏற்றம் வழங்கி செங்குத்தான வாண்மை விருத்தியை அறிமுகப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
4. ஆசிரியர் சேவையில் இருந்து அதிபர் சேவைக்கு பதவிஉயர்வு பெறும் போது, குறைந்த அடிப்படைச் சமபளம் பெறும் பிரச்சினையை தீர்ப்பதற்கு, அதிபர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்யும் போது, தரம் 111 க்கு மாத்திரமன்றி, ஆசிரியர் சேவை அனுபவத்தின் அடிப்படையில் அதிபர் சேவையின் தரம் 1 மற்றும் 11 மற்றும் 111 க்கு உள்ளர்ப்புச் செய்யும் வகையில் அதிபர் சேவைக் குறிப்பில் தீருத்தத்தை மேற்கொள்ளல்
5. கஸ்டப்பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கல், தற்போது அதிபர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை தற்போதைய நிலமைகளுக்கு ஏற்ப மாற்றுதல்
6. நிறைவேற்றுத் தர அதிபர்களுக்கு ஏனைய நிறைவேற்றுத்தர சேவைகளில் உள்ள கொடுப்பனவு மற்றும் அலுவலக கொடுப்பனவை வழங்கல்
7. அதிபர் ஆசிரியர் சேவைகளுக்கிடையில் காணப்படும் சம்பள ஏற்றம் தொடர்பான முரண்பாட்டை தீர்த்தல்
8. ஆசிரியர் சேவையில் குறைந்த பட்சம் 6 அல்லது 6 வருடங்களை நிறைவு செய்தவர்கள் அதிபர் சேவைக்கு குறைந்த தகைமை நிறைவு செய்திருப்பின் சேவைத் தேவைகளில் படி, உள்ளீர்ப்பு நடைபெறுகிறது. தற்போது அது முதல் நியமனமாகக் கருதப்படுகிறது. அதனை பதவி உயர்வாக ஏற்க வேண்டும்.
9. அதிபர்கள் ஆசிரியர்களின் கெளரவத்தைப் பாதுகாக்கும் அடிப்படையில் அலுவலக சுற்றாடல், அலுவலக அடையாள அட்டை, அலுவலக மறறும் நிதி நடவடிக்கைகளை நடாத்திச் செல்லலுக்காக பணியார்கள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்கல். நாட்டில் காணப்படும் அசாதாரண சூழலை கருத்திற் கொண்டு ஒன்லைன் கற்பித்தலை மேற்கொள்ள தேவையான தொழிநுட்ப கருவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலகு முறை ஒன்றை அறிமுகப்படுத்தல் முதலானவை பரிந்துரைக்கப்படுகிறது.
தொகுப்பு – Jasar Jawfer/ teachmore.lk