தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை இன்னும் ஒரு சில தினங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.