அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல் புதிய சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.
அதன் உள்ளடக்கத்தில் மிக முக்கியமான அம்சங்கள் தமிழ் படுத்தி தரப்படுகிறது
இதன்படி, ஒரு அரச ஊழியர் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் சேவைக்கு சமூகமளிக்குக் கூடிய விதத்தில் குழுக்கள் உருவாக்கப்பட்டு சேவை தொடர வேண்டும்
திட்டத்தின் படி, அழைக்கப்பட்டு குறித்த தினத்தில் வருகை தராதவர்களுக்கு மாத்திரமே விடுமுறை குறிக்கப்படல் வேண்டும்
இவ்வாறு அலுவலகம் வருவதற்கு குறிக்கப்பட்ட தினங்களில் மற்றும் அல்லாத தினங்களில் ஒன்லைனில் கடமையாற்ற வேண்டும்.
இவ்வாறு அழைக்கப்படும் ஒழுங்கில் கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் கொண்ட தாய்மார்கள் சேவைக்கு அழைக்கப்படக் கூடாது
சந்தேகத்துக்குரிய அறிகுறிகள் கொண்ட மற்றும் வேறு பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு வழங்கும் விடயத்தில் நிறுவனத் தலைவர் ஆதரவுடன் நடந்து கொள்ள வேண்டும்
சேவைக்கு வருகை தரல் மற்றும் வெளியேறலுக்கு ஒப்பமிடுவது மாத்திரம் போதுமானது.