ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் வயதெல்லை அதிகரிக்கக் கோரி மார்ச் 8 ஆம் திகதி ஆர்ப்பாடடத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்களம் இதற்கான அழைப்பை விடுத்துள்ளது. ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி, குறிப்பிட்ட வயதெல்லைக்கு (35வயது) அப்பால் விண்ணப்பிக்க முடியாது என்பதால், இந்த வயதெல்லையை அதிகரிக்குமாறு கடந்த வாரம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைக்கு சாதாகமான பதில் கிடைக்காததை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.