பாடசாலைகளிலிருந்து ஒரு வருடத்திற்கு இரண்டு கோடி ப்லாஸ்டிக் பேனைகள் வெளியிடப்படுகின்றதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இவை சுமார் 450 வருடங்கள் மண்ணில் மக்காது காணப்படும் என்றும் சூழலியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருநாளைக்கு மாத்திரம் 100 கிலோகிராம் பேனைகள் அகற்றப்படுகிறது. அத்தோடு பெருமளவு பற்தூரிகைகளும் வெளியேற்றப்படுகிறன்றன. இவை சுற்றாடலை அதிகம் பாதிக்கின்றன. எனவே இவற்றைக் குறைப்பதற்காக சுற்றாடல் அமைச்சு திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்டமல்ல ஒழுக்கம் என்ற தொணிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக அரச அலுவலகங்களில் பாடசாலைகளில் ப்ளாஸ்டிக் பொருட்களைச் சேகரிப்பதற்கான கொள்கலன்கள் வைக்கப்படும் என்றும், இத்திட்டத்தின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் 318 சேகரிப்புக்கான கூடைகள் வினியோகம் கடந்த வாரம் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 12 மாதங்களில் இத்திட்டத்தின் கீழ், 3000 நிறுவனங்களுக்கு இவ்வாறு சேகரிப்பு கொள்கலன்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இவ்வருடம் 4000 நிறுவனங்களுக்கு இவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.