பாடசாலைகளுக்கு ஆசியர்களை அழைக்கும் கடிதத்தை வாபஸ் வாங்குங்கள்: இல்லையேல் புதிய போராட்டங்களில் இறங்குவோம்.
கல்வி அமைச்சின் செயலாளர் ஆசியர்களைக் கடமைக்கு அழைத்து, வருகை தராத ஆசியர்களுக்கு விடுமுறை பதியுமாறு கோரிய கடிதத்தை கல்வி அமைச்சர் வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அவ்வாறு வாபஸ் வாங்காத போது அதனை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளில் இறங்குவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்களின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏற்கனவே பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட்டதற்கு ஏற்ப, இக்கடிததம் வாபஸ் பெற வேண்டும் என்பதோடு, இக்கடிதத்தின் படி, ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பாடசாலை செல்ல வில்லை என்பதனாலும் இக்கடிதத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திங்கள் முதல் புதிய போராட்ட ஒழுங்குகளில் இப்போராட்டம் முன்கொண்டு செல்லப்படும் என்றும் அதனை அறிவிப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்த்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.