2022 ஆம் ஆண்டிற்கான அடுத்த பாடசாலை தவணை திங்கள் (07) ஆரம்பமாகவுள்ளது. 2021 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததையடுத்து, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நாளை மறுதினம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை ஆரம்பமாகும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய புதிய சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய,
20 மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் அனைத்து நாட்களிலும் பாடசாலைக்கு அழைக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
20 தொடக்கம் 40 வரையான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில், மாணவர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒருவாரம் விட்டு ஒருவாரம் என்ற அடிப்படையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென புதிய சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில் மாணவர்களை சமமான எண்ணிக்கையில் 03 குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலைக்கு அழைக்கப்படாத மாணவர் குழுக்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள், மாற்று வழிமுறைகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு, அவர்களுக்கான பாடத்திட்டமும் பூரணப்படுத்தப்பட வேண்டுமென கல்வியமைச்சின் செயலாளரினால் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது