சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மேலும் பத்து பாடசாலைகள் இலங்கையின் தேசிய பாடசாலைகளாக இணைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் 1000 தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேசிய கொள்கையின் ஒரு அங்கமாகவே இந்த பாடசாலைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை (08) அலரிமாளிகையில் இடம்பெறும் வைபவத்தின் போது இந்த பத்து புதிய தேசியபாடசாலைகள் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக உள்வாங்கப்படவுள்ளன.
புதிய சேர்க்கையுடன், இலங்கையின் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 495 ஆக உயரும்
பாடசாலைகளின் பட்டியல்
- பெலிஅத்த புலக்தண்டாவ தர்மபால மகளிர் கல்லூரி
- பிபில யஷோதரா மகளிர் கல்லூரி
- தொம்பே, தேவி பாலிகா வித்தியாலயம்
- கல்முனை மஹமூத் மகளிர் கல்லூரி
- கெகிராவ வித்யார்த மகாவித்தியாலயம்
- கேகல்ல, வித்யார்த மகா வித்தியாலயம்
- கேகல்ல, ஸ்வர்ண ஜயந்தி மகா வித்தியாலயம்
- ஹட்டன் புனித கேப்ரியல் மகளிர் கல்லூரி
- பேதுருதுடுவவ மெதோதிஜ்த மகளிர் கல்லூரி
- தங்கொடுவ பொத்த மகளிர் கல்லூரி
- வலஹன்துல ஜனாதிபதி மகளிர் வித்தியாலயம்