கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கிய சுற்றறிக்கையின்படி, அதிபர்கள் ஆசிரியர்கள் பணிக்குச் செல்ல வில்லை என்பதால், அவர்கள் பணியில் இருந்து விலகியதாக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று ஒரு பத்திரிகையாளர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண, அரசாங்கம் அத்தகைய முடிவை எடுக்காது என்று கூறினார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் மற்றும் எதிர்ப்பை தெரிவிக்கும் உரிமையை ஜனாதிபதி கூட அங்கீகரிக்கிறார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க அமைச்சரவையில் நேற்று (02) சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிராகரிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க தேவையான நிதியை தற்போது ஒதுக்க முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், அடுத்த பட்ஜெட்டில் இதற்காக நிதி ஒதுக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.