கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு மூன்று வாரங்களுக்குள் – மார்ச் 31 க்குள் – நியமனம் வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்த்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.
பெப்ரவரி 10 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு இந்நியமனங்கள் தொடர்பாக கடிதம் மூலம் நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். ஒரு மாதம் ஆகியும் இது தொடர்பாக அவர்கள் எந்த பதிலையும் வழங்க வில்லை. அக்கடிதத்தில் நியமனம் பெறவுள்ள ஆசிரியர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க நாம் தயார் என்று அறிவித்திருந்தோம். எனவே, இவர்களுக்கு அநீதி இளைக்கப்படுகிறது. அதற்கு எதிராகப் போராட நாம் தயார் என்றும் மகிந்த ஜயசிங் தெரிவித்தார்.
மார்ச் 31 க்கு முன்னர் இந்நியமனங்களை வழங்குவதற்கு நாம் காலக் கெடு விதிக்கிறோம். கல்வி அமைச்சு அந்த காலத்திற்குள் நியமனத்தை வழங்காதுவிடில் நாம் அதற்கான போராட்டத்தில் இறங்குவோம் என்றும் அவர் கர்ச்சித்தார்.
ஏனைய நியனமங்களை வழங்குவதற்கு காட்டும் ஆர்வத்தை டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு காட்டுவதில்லை என்பதை அவதானிக்க முடியவில்லை.
மார்ச் 31 க்கு முன்னர் நியமனம் வழங்கப்படாது விடின் ஏப்ரல் 4 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்னர், டிப்ளோமாதாரிகளுடன் நாம் கல்வி அமைச்சுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு உயர் தரம் எழுதி கல்வியியல் கல்லூரிகளுக்கு உள்ளீர்க்கப்பட்ட 4700 பயிலுனர்களுக்கு வழங்குவது தொடர்பாக அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என்று தொடர்ந்தும் பல தரப்புக்கள் குற்றம் சாட்டிவழங்குவது குறிப்பிடத்தக்கது.