இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கத்திற்கும் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கல்வித் துறை சார்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. கலந்துரையாடலின் உடன்பாடு காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக குறித்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையின் தமிழாக்கத்தை த
இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கம் 02/09 அன்று விடுத்த கோரிக்கையை அடுத்து கல்வி அமைச்சின் கௌரவ செயலாளர் கபில பெரேரா மற்றும் இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போது எட்டப்பட்ட உடன்பாடுகள் பின்வருமாறு.
✅ இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கம் ஏற்கனவே உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தங்கள் பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் வாய்ப்பை வழங்குதல் – கல்வி ஊழியர்களுக்கான தற்போதைய 5% வாய்ப்பை 07% ஆக உயர்த்துதல்
✅கல்விச் செயலாளரின் உத்தரவை மீறி சில மாகாண அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து அவதானம் செலுத்துதல்.
✅புதிய நியமனங்களை வழங்குவதற்கு முன்னர் ஆசிரியர் இடமாற்ற சபைகளை செயற்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல்
✅தேசிய கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இல்லாத தனி நிறுவனமாக தேசிய கல்வியற் கல்லூரிகளை நிறுவுதல் மற்றும் பட்டம் பெற்ற ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது (அதே வாய்ப்பை தற்போது உள்ளவர்களுக்கும் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.)
✅ஆசிரியர்களின் பதவி நிரந்தரமாக்கலுக்கு அரச மொழித் தேர்ச்சி கட்டாயமற்றிருப்பினும் (சில மாகாணங்களில் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது) அவ்வாறான பாடநெறிக்கு சில தரப்புக்கள் பணம் அறவிடுகின்றன. அதனைத் தடுத்தல்
✅ ஆசிரியர் அதிபர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டையை வழங்குதல் மற்றும் தேசிய பாடசாலைகளில் இருந்து அதனை ஆரம்பித்தல். அதனை அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளல்
✅2022 A/L பரீட்சை நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இரண்டாம் தடவை தோற்றும் மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் இல்லை. எனவே மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக கவனம் செலுத்த உடன்பாடு எட்டப்பட்டது.