மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பாடசாலைக்கு அழைக்கும் ஒழுங்கு கைவிடப்பட்டு அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் பாடசாலைக்கு அழைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, 14 ஆம் முதல் அனைத்து மாணவர்களும் வழமை போன்று பாடசாலைக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதோடு, கொவிட் பிரச்சினைகள் ஏதும் ஏற்படின் அப்பாடசாலைகளை நடாத்திச் செல்வது தொடர்பாக வலயக் கல்விக் காரியாலய பணிப்பாளரின் அனுமதியுடன் நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.