கல்வித் திணைக்களங்கள் பாடசாலைகளின் கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் புதிய சுற்றுநிருபத்தின் படி செயற்படுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்படி, பாடசாலை நடைபெறுமா இல்லையா என்பது பற்றி எந்த ஒரு தெளிவான முடிவையும் கூறாமல், பொதுவாக, கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் புதிய சுற்றுநிருபத்திற்கமைய செயற்படுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனினும், ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும் என்பதே இக்கடிதத்தின் பொதுவான வேண்டுகோளாகும்.