அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் சுகவீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள முரண்பாட்டைத் தீர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைப்பின் செயலாளர் சந்தன சூரியயாரச்சி தெரிவித்தார்.
இப்போராட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.