ஊவ வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தகைமைகாண் பரீட்சை ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல்
ஊவ வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பல்வேறு பாடநெறிகளுக்கான தகைமை காண் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நடைபெறும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜயன்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பாடநெறிகளுக்கும் தகைமைகாண் பரீட்சைக்கும் விண்ணப்பித்தவர்களுக்கு இப்பரீட்சை நடைபெறும். இதற்கேற்ப ஓகஸ்ட் 4 ஆம் திகதி கணினி விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பாடநெறிக்கான தகைமை காண் பரீட்சையும் 5 ஆம் திகதி கைத்தொழில் தகவல் தொழிநுட்பத்திற்கான பரீட்சையும் 6 ஆம் திகதி முயற்சியாண்மையும் முகாமைத்துவமும் பாடநெறிக்கான பரீட்சையும் 7 ஆம் திகதி சுற்றுலாத்துறைக்கான பாடநெறி தொடர்பான பரீட்சையும் ஒடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை www.uwa.ac.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்