இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அரச காணிகளின் உரிமையை பல்கலைக்கழகத்திற்கு வழங்கல்.
1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 1980 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை திறந்த பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற தேசிய பல்கலைக்கழகங்கள் பதினாறில் (16) ஒன்றாகும்.
அடிப்படைப் பாடநெறி தொடக்கம் கலாநிதிப் பட்டப்படிப்பு வரை எழுபத்தைந்து கற்கை நெறிகள் (75) நடாத்தப்பட்டு வருவதுடன், 2020 ஆம் ஆண்டில் குறித்த பல்கலைக்கழகத்திற்கு 44,600 மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி முறை மூலம் உயர்கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ள ஓரேயொரு உயர்கல்வி நிறுவனமான இப்பல்கலைக்கழகத்தில் பிராந்திய நிலையங்கள் ஒன்பதும் (09) கற்கை நிலையங்கள் பத்தொன்பதும் (19) நாடளாவிய ரீதியில் அமைந்துள்ளது.
மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதற்காக குறித்த பிராந்திய நிலையங்கள் மற்றும் கற்கை நிலையங்களில் போதுமானளவு பௌதீக வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கு இயலுமான வரையில் குறித்த நிலையங்கள் அமைந்துள்ள பதினேழு (17) அரச காணிகளை அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு ஒப்படைப்பதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.