இலங்கை ஆசிரியர் சேவையில் 2:11 தரத்திற்கு நேரடியாக (BEd) இணைத்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்களின் முதலாவது தடைதாண்டல் பரீட்சைக்கான குறித்த இதவடிவக் கற்கைச் செயற்பாடு
இலக்கம் 1885/38 உம் 2014.10.23 திகதியுடைய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஆசிரியர்களுடைய வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைக்கு அமைவாக செயற்படுத்தப்படும் இதவடிவக் கற்கை தொடர்பானது.
அதன்படி இலங்கை ஆசிரியர் சேவையில் 2:11 தரத்திற்கு நேரடியாக (BEd) இணைத்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் முதலாவது வினைத்திறன் தடைதாண்டலுக்காக ஏழு இதவடிவங்களை பூரணப்படுத்துதல் வேண்டும்.
பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஊடாக ஆசிரியர்களின் வினைத்திறன் தடைதாண்டல் கற்கையைப் பூரணப்படுத்துவதற்கு குறித்த இடைக்கால ஒழுங்கு முறைகள் 2019.10.23 ஆந்திகதியிலிருந்து 2021.10.22 ஆந் திகதி வரை நீடிக்கப்பட்டு உள்ளதாக மேலதிக செயலாளர் (நிறுவனம்) ED/02/29/02/02/06 திகதி : 2021.05.19 கடிதத்தின் மூலம் தங்களிற்கு தெரியப்படுத்தி உள்ளார். அதன்படி இந்த இதவடிவக் கற்கைகளை 2021.10.22 திகதியுடன் முதன்மைப்படுத்தி நிறைவு செய்தல் வேண்டும்.
இதனால், இவ்வாசிரியர்களின் இதவடிவக் கற்கைகளை இயன்றவரை விரைவாக செயற்படுத்தி நிறைவு செய்து கொள்வதுடன் இதவடிவம் நிறைவேற்றுவதற்கான காலஎல்லையிலுள்ள பல ஆசிரியர்கள் இருப்பதனால் இலங்கை முழுமையும் பரந்திருக்கின்ற ஆசிரியர்கள் யாவரையும் ஒன்றிணைத்து நிகழ்நிலைக் கற்கை முறைச் செயற்றொடரின் கீழ் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இச்செயற்றிட்டம் சிங்களம் தமிழ் மொழி மூலமாக கீழே குறிப்பிடப்படும் ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலையங்களின் ஊடாக அமுல்படுத்தப்படும்.