மாகாணங்கிடையிலான ஆசிரியர் இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது, பின்வரும் ஆவணங்களும் கட்டாயம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என வட மத்திய மாகாண பிரதான செயலாளர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளவர்கள் பின்வரும் ஆவணங்களை வலயக் கல்விப் பணிமனை ஊடாக அனுப்பி வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இடமாற்றங்கள் தொடர்பான பரீசீலனை இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- இடமாற்றம் கோரும் மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் கிராம சேவை அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதம்
- இடமாற்றம் பெற்றதன் பின்னர், குறிப்பிட்ட மாகாணத்தில் குறைந்தது 5 வருட சேவையை தொடருவதற்கான நிபந்தனையை ஏற்றுக் கொள்வதற்கான சத்தியக் கடதாசி
- இடமாற்றம், எதிர்பார்க்கப்படும் வெற்றிடம் காணப்படல், அனுமதிக்கப்பட்ட பணிக்குழாமிற்கு உட்படல்
- சேவை நிரந்தரப்படுத்தப்படல் அல்லது அதற்கான தகைமை பெறல்
- குறிப்பிட்ட பதவியில் குறிப்பிட்ட தரத்தில் சிரேஸ்டத்துவத்தில் இறுதி நிலையில் வைப்பதற்கான நிபந்தனைக்கு உட்பட்டு, மாகாண அரச சேவையில் உள்ளீர்ப்பு செய்யப்படுவதற்கான விருப்பக் கடிதம்
- தகுதிகாண் காலப் பகுதியில் ஆரம்ப 3 வருடத்திற்குள் சம்பள மற்ற விடுமுறை பெற வில்லை என்பதை உறுதிப்படுத்தும் நிறுவனத் தலைவரின் கடிதம்
- அலுவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டோ அல்லது ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை என்றோ உறுதிப்படுத்தும் கடிதம்
- அலுவருக்கு எதிராக பாரதூரமான நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதற்கான சான்றுக் கடிதம்
- அலுவருக்கு எதிராக நீதி மன்ற நடவடிக்கைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் நிறுவனத்தலைவரின் கடிதம்
- அலுவர் மாகாண நிதி வழங்கின் கீழ் விசேட பயிற்சிகள் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் நிறுவனத் தலைவரின் கடிதம்
- அலுவரின் கடன்கள் ஒரே தடவையில் செலுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தல்
- இடமாற்றம் கோரும் மாகாணத்தில் எந்தப் பாடசாலையிலும் கடமையாற்ற விருப்பம் தொரிவித்தல்