பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றத்தினால் சுகாதார அமைச்சுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலதிக நேர ஊதியத்தை குறைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது அவ்வாறு செய்யாது நடைமுறையை தொடருமாறு சுகாதார செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் கூறுகிறார்.
எதிர்காலத்தில் புதிய வரவு செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் சுகாதாரத் துறை மட்டுமன்றி நாட்டின் ஏனைய துறைகளும் வீழ்ச்சியடையக்கூடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.