2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னரும் சந்தர்ப்பம் வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது
பல்கலைக்கழக அனுமதிக்காக ஒன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தெரிவித்துள்ளார்
இன்று நள்ளிரவுடன் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் கால நிறைவடைகின்றது. பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலான இணைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பது இன்றுடன் நிறைவுக்கு கொண்டு வருவப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 66000 விண்ணப்பங்களை எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமரதுங்க கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இதுவரை விண்ணப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு பணத்தட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் மேலும் சில நாட்களாக வழங்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்
தமிழன்