வவுனியா கனேசபுரம் காட்டுப்பகுதியில் இருந்து 15 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி மேலதிக வகுப்பிற்குச் சென்று காணாமல் போனதாக பெற்றார், பொலிஸில் முறைப்பாடு செய்னர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் பொலிஸார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிறுமியின் வீட்டுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதை ஒன்றில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த பரதேசத்தில் தேடுதல் தீவிரமாக்கப்பட்டது. பிரதேசத்தில் காணப்பட்ட பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து சிறுமியின் சடலம் இரவு 8 மணியிளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.