இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இக்கைது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகுள் அமைப்புக்கு அறிவிப்பிதற்கான பொறுப்பு காணப்படுவதாகவும் Special Rapporteur on human rights defenders – Mary Lawlor தெரிவித்துள்ளார்.
இது, ஜோஸப் ஸ்டாலின் முதலான மனித உரிமைப் போராளிகள் தண்டிக்கப்படுவதற்கான நேரமல்ல என்றும் அவ்வாறானவர்களின் தலையீடு அதிகம் தேவைப்படும் காலப்பகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.