விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை நாளை மற்றும் நாளை மறு தினம் நிறுத்துவதற்கு கல்வி அமைச்சர் இணங்கியுள்ளதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்றக் கலந்தரையாடலை அடுத்து கல்வி அமைச்சு பரீட்சை ஆணையாளருக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு கொடுப்பனவு தொடர்பாகவும் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணியை விட அனைத்து நிலையங்களிலும் ஆர்ப்பாடடம் செய்து எரிபொருள் வழங்குமாறு கோருவதே அதிகம் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனை நிவர்த்தி செய்யவோ இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளவோ அதிகாரிகளுக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
எரிபொருள் வழங்குவதற்கு பொருத்தமான நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் ெவள்ளிக்கிழமை முதல் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மதிப்பீட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு வழங்க இணக்கம் காணப்பட்ட போதிலும் அது வழங்குவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கல்வி அமைச்சுக்கு சுட்டிக்காட்டப்பட்டதாக ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.