உளவளத்துணை டிப்ளோமா பாடநெறி
தேசிய கல்வி நிறுவகம்
மகரகம
விண்ணப்ப முடிவுத் திகதி 21.02.2022
நிறுவகத்தின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் முன்னெடுக்கப்படும் மேற்படி பாடநெறிக்கான விண்ணப்பப் படிவம் கோரப்பட்டுள்ளது.
01. பாடநெறியின் தன்மை:
1.1 உளவளத்துணை டிப்ளோமா பாடநெறியானது 32 திறமை’ மட்டங்களை உள்ளடக்கிய ஒரு வருடகால வார இறுதி நாட்களில் இடம்பெறும் பகுதி நேரக் கற்கை நெறியாகும்.
1.2 நிகழ்நிலை மற்றும் நேரடி விரிவுரை வகுப்புக்கள் ஆகிய இருமுறைகளிலும் நடைபெறவுள்ள மேற்படி பாடநெறியானது வழிகாட்டல் மற்றும் ஆலோசனை
தொடர்பான பிரயோகப் பயிற்சியையும் உள்ளடக்கியுள்ளது.
1.3 பாடநெறி சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெவ்வேறாக இடம்பெறும்.
02. விண்ணப்பத் தகைமை:
அரச தனியார் மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலை
ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பொது தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில்
சித்தியடைந்த முன்பள்ளி ஆசிரியர்களாக சேவை புரிவோர் இக் கற்கை நெறிக்காக விண்ணப்பிக்கலாம். (சேவைச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்!
2022.02.21 ஆம் திகதியன்று 55 வயதுக்கு மேற்படாதோர்.
03. பாடநெறிக்கான தெரிவு முறை:
கிடைக்கப்பெறும் விண்ணப்பப் பத்திரங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக எழுத்துப் பரீட்சை அல்லது நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவர்.
04. கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் – 500 ரூபாய்
பதிவுக் கட்டணம் பாடநெறிக் கட்டணம் – 1000 ரூபாய்
பாடநெறிக்கட்டணம் – 40,000 ரூபாய்
(சம்மான இரு தொகைகளாக இரண்டு தவணைகளில் செலுத்த முடியும்)
05. பாடநெறி நடைபெறும் இடம்: தேசிய கல்வி நிறுவகம், மஹரசும்.
06. விண்ணப்பிக்கும் முறை:
6.1 தேசிய கல்வி நிறுவகத்தின் இணையதளத்தினுள் பிரவேசித்து பரீட்சைத்
இணைக்களத்தின் வலைப்பக்கத்தில் விண்ணப்பப் படிவம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். http://www.exams.nle.lk/intakes/new
6.2 வார, நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை உள்ள காலப்பகுதியில் 0117601752 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
07. விண்ணப்ப இறுதித்திகதி: 2022.02.21