கல்வியறிவு அதிகமாக உள்ள நாடுகளில், கல்வியின் செயல்திறன் மாணவர்களை மையமாகக் கொண்டு அளக்கப்படுவதில்லை, ஆசிரியர்களை மையமாகக் கொண்டே அளவிடப்படுகிறது என்றும், ஆசிரியர்களின் பங்கு எப்போதும் உகந்த அளவில் இருக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கூறுனார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் புறக்கணிக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்கும் வகையில் கல்வித்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்வி அமைச்சின் கீழுள்ள பல்வேறு திணைக்களங்கள், நிறுவனங்கள், சேவைகள், கிளைகள், அலகுகள் என்பனவற்றுக்கு இடையிலான பரந்த ஒருங்கிணைப்பை மீள ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். சேவைகளை வினைத்திறனுடனும் வினைத்திறனுடனும் பேணுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, கல்வி இராஜாங்க செயலாளர் உபாலி சேதர, பேராசிரியர் குணபால நாணயக்கார, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன மற்றும் கல்வித்துறை சார்ந்த அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.