மாணவர்களின் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைக்கு உள்வாங்குமாறும், ஆசிரியர்களை அருகில் உள்ள பாடசாலையில் இணைப்புச் செய்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் ஏனைய இடையூறுகளைக் கருத்தில் கொண்டு அருகாமையில் உள்ள பாடசாலைகளில் தமக்கு இணைப்புச் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பல ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கான பொருத்தமான வழிமுறையை எதிர்காலத்தில் திட்டவட்டமான திட்டத்தின் ஊடாக சமர்பிப்பேன் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
“நாட்டில் சுமார் 10,155 பாடசாலைகள் இயங்குகின்றன. நாட்டில் இரண்டு மாணவர்கள் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே உள்ள பாடசாலைகளும் உள்ளன. 51% பாடசாலைகள் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகள். 78% பாடசாலைகளில் 500 க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். 92% பாடசாலைகளில் 1,000க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.1,462 பகளிால் 50க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.
100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 3000 பள்ளிகள் உள்ளன. எனவே, பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகளின் பிரச்சினைகளை நாம் தீர்த்து வைக்க வேண்டும், அதன் பின்னர் போக்குவரத்து பிரச்சினைகளை ஆசிரியர்களுடன் ஆராயலாம் என பேராசிரியர் பெரேரா தெரிவித்தார்