English is made compulsory in the recruitment of teachers
ஆசிரியர் நியமனத்திற்கு ஆங்கிலம் கட்டாயம்
எதிர்வரும் 10 வருடங்களுக்குள் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்கும், ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஆங்கிலத்தைக் கட்டாயமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புவியியல், வரலாறு போன்ற பாடங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், தற்போது உயர்தரப் பாடங்கள் கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளும் இணையத்துடன் இணைக்கப்படும் எனவும், அதன் பின்னர் கல்விப் பொதுத் தரா தர சாதாரண தரம் வரையிலான அனைத்துப் பாடசாலைகளும் இணையத்துடன் இணைக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று (25) இடம்பெற்ற ‘ரஹல் நூற்றாண்டு பிரதாப்’ நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். காலநிலை மாற்றத்தை பாடமாக்குவதற்கும், வரலாற்றின் புதிய நிறுவனத்தை நிறுவுவதற்கும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் கல்வியை நவீனமயப்படுத்துவதற்கு பெருமளவிலான பணத்தை செலவிட அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தில் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 2035 ஆம் ஆண்டளவில் நாட்டில் புதிய கல்வி முறையை உருவாக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
ඉදිරි වසර 10 ඇතුළදී සෑම පාසලකම ඉංග්රීසි අධ්යාපනය ලබාදීමටත්, ගුරුවරුන් බඳවා ගැනීමේදී ඉංග්රීසි අනිවාර්ය කිරීමටත් පියවර ගන්නා බව ජනාධිපති රනිල් වික්රමසිංහ පැවසීය.
එමෙන්ම භූගෝලය සහ ඉතිහාසය වැනි විෂයයන් පිළිබඳව සියලු දෙනාට අවබෝධයක් තිබිය යුතු අතර උසස් පෙළ විෂයය ධාරාව පැවැත්වෙන සියලු පාසල් අන්තර්ජාලය සමග මුසුකිරීමටත් අනතුරුව සාමාන්ය පෙළ දක්වා අධ්යාපන පැවැත්වෙන සියලු පාසල්වලට අන්තර්ජාලය ලබාදීමටත් කටයුතු කරන බවද ජනාධිපතිවරයා සඳහන් කළේය.
ජනාධිපතිවරයා මේ බව සඳහන් කළේ මාතර රාහුල විද්යාලයට වසර සියයක් සපිරීම නිමිත්තෙන් ඊයේ (25) පැවැති ‘රහල් සියවස් ප්රතාප’ සියවස් සැමරුම් උත්සවයට එක් වීමෙනි. දේශගුණික විපර්යාස විෂයයක් බවට පත් කිරීමටත් ඉතිහාසය පිළිබඳ නව ආයතනයක් ස්ථාපිත කිරීමටත් සැලසුම් කර ඇති බව පැවසූ ජනාධිපතිවරයා ඉදිරියේදී අධ්යාපනයේ නවීකරණය වෙනුවෙන් විශාල මුදලක් වැය කිරීමට රජය සූදානම් බවද පැවසීය.
එමෙන්ම 2048 වන විට දියුණු ශ්රී ලංකාවක් ගොඩනැගීමට රජය ගෙන යන වැඩපිළිවෙළේදී අධ්යාපනය පිළිබඳ විශේෂ අවධානයක් යොමු කර ඇති බවත් 2035 වන විට රට තුළ නව අධ්යාපන ක්රමයක් ඇති කිරීම රජයේ අපේක්ෂාව බවත් ජනාධිපතිවරයා වැඩිදුරටත් සඳහන් කළේය.