இம்முறை க.பொ.த உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 80 வீத கட்டாய வரவு நிபந்தனையை அமுல்படுத்த வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் பல்வேறு நெருக்கடி நிலை காரணமாக மாணவர்கள் தொடர்ச்சியாக 80 வீத வரவைப் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுவதாகவும் எனவே அவற்றைக் கருத்திற் கொண்டு 80 வீத வரவு நிபந்தனையை கருத்திற்கொள்ளாது உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஆணையாளர் வேண்டியுள்ளார்.
இவ்வருடம் மாத்திரம் இந்த சலுகை வழங்கப்படும் வகையில் சுற்றுநிருபம் ஒன்றை விரைவில் வெளியிட கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.