பாடசாலை வேன் மற்றும் பஸ்களுக்கு டீசல் மானியம் வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், பாடசாலை வேன் கட்டண அதிகரிப்பினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.
பாடசாலை வேன் கட்டணத்தின் விலை அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஸ்டார்லின், பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு, எவ்வாறு பணம் செலுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
தொழிற்சங்கம் கல்வி அமைச்சரிடம் பல தீர்வுகளை முன்வைத்ததாக தெரிவித்த ஸ்டார்லின், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் தீர்வு காணாததால் சாதாரண பஸ்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனவே, பாடசாலை வேன்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும் என்று கூறிய அவர், பாடசாலை பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என்றார்.