க.பொ.த.உயர்தர தொழில்நுட்ப பிரிவுத் தெரிவும், எதிர்கால அனுகூலங்களும்!
க.பொ.த உயர் தர
♦️பௌதீக விஞ்ஞான பிரிவு (Physical Science Stream),
♦️உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (Bio Science Stream)
♦️வணிகப் பிரிவு (Commerce Stream),
♦️கலைப் பிரிவு (Arts Stream) ஆகிய துறைகளுக்கு மேலதிகமாக 2013 ஆம் ஆண்டில்
♦️ தொழில்நுட்ப பிரிவு (Technology Stream) கல்வி அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக தொழில்நுட்பப் பிரிவை ஆரம்பிப்பதற்கு பிரதான காரணங்களில் சில.
1️⃣ நாளாந்த வாழ்வில் பயன்படத்தக்க தொழில்நுட்ப அறிவு உடையவர்களை உருவாக்குதல்.
2️⃣ பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியான சிறந்த தீர்வைக் கண்டறிவோரை உருவாக்குதல்.
3️⃣ மேலதிக தொழில்நுட்ப அறிவு கொண்டோரை உருவாக்குதல்.
4️⃣ கலைத்துறையில் கற்கும் மாணவர் எண்ணிக்கையைக் குறைத்தல்.
5️⃣ எதிர்கால தொழிற்சந்தைக்கு தேவையானோரை உருவாக்குதல்.
தொழில்நுட்பப் பிரிவில் கற்பதால் கிடைக்கும் நன்மைகள்.
1️⃣ தொழிநுட்பவியலில் இளமாணிப் பட்டத்தை (B.Tech) பெறலாம்.
2️⃣ தொழிநுட்பக்கல்லூரி, தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்ற வற்றில் NVQ தகைமையுடைய இளமாணிப் பட்டங்கள் மற்றும் டிப்ளோமா பட்டம் பெறலாம்.
3️⃣ உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றாலும் ,பெறா விட்டாலும் NVQ Level 3 சான்றிதழைப் பெறலாம்.
உயர் தர தொழில்நுட்ப பிரிவில் (Technology Stream) அனுமதிக்கான தகைமைகள்.
1️⃣ Engineering Technology Stream
பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
🔥க.பொ.த.சா/த பரீட்சையில் தமிழ் மொழி, கணிதம் உட்பட 3C,3S சித்தி அவசியம்.
🔥இதில் விஞ்ஞான பாடத்திலும், கணித பாடத்திலும் குறைந்தது “S” சித்தி அவசியம்.
2️⃣ Biosystems Technology Stream
உயிர் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவு
🔥க.பொ.த.சா/தரப் பரீட்சையில் தமிழ் மொழி கணிதம் உட்பட 3C,3S சித்தி அவசியம்.
🔥மேலும் விஞ்ஞான பாடத்தில் குறைந்தது “S” சித்தியுடன் கணித பாடத்தில் சித்தி அடையாதவர்கள் அடுத்த வருடம் கணித பாடத்தில் சித்தி பெற்றுத் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி பெறலாம்.
தொழிநுட்பப் பிரிவுக்கான பாடச் சேர்க்கைகள்.
1️⃣பொறியியல் தொழில்நுட்ப பிரிவு. Engineering Technology Stream.
🔥 பின்வரும் இரு பாடங்களையும் கட்டாயம் தெரிவு செய்ய வேண்டும்.
👉Engineering Technology
👉Science for Technology.
🔥 *மூன்றாவது பாடமாக பின்வரும் 11 பாடங்களில் ஒற்றைத் தெரிவு செய்ய வேண்டும்.*
👉பொருளியல்
👉புவியியல்
👉மனைப்பொருளியல்
👉ஆங்கிலம்
👉தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கை
👉தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
👉விவசாய விஞ்ஞானம்
👉கணக்கீடு
👉வணிகக் கல்வி.
👉சித்திரம்
👉கணிதம்
2️⃣Biosystems Technology Stream
உயர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு.
🔥 பின்வரும் இரு பாடங்களையும் கட்டாயம் தெரிவு செய்ய வேண்டும்.
👉Biodystems Technology
👉Science for Technology.
🔥 *மூன்றாவது பாடமாக பின்வரும் 10 பாடங்களில் ஒற்றைத் தெரிவு செய்ய வேண்டும்.*
👉பொருளியல்
👉புவியியல்
👉மனைப்பொருளியல்
👉ஆங்கிலம்
👉தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
👉தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கை
👉விவசாய விஞ்ஞானம்
👉கணக்கீடு
👉வணிகக் கல்வி.
👉சித்திரம்
👉கணிதம்
பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பிரிவில் அனுமதியை பெற்றுக் கொள்ளும் விதம்.
Engineering Technology, Biosystems Technology ஆகிய பாடங்களில் எழுத்துப் பரீட்சையில் 75%புள்ளிகளும், செய்முறை பரீட்சையில் 25% புள்ளிகளும் பெற்று, மூன்று பாடங்களிலும் சித்தி பெற்று, பல்கலைக்கழக அனுமதிக்கான அடிப்படைத்தகுதி பெற்ற மாணவர்களில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.
*2021/22 ஆம் கல்வி ஆண்டில் தொழில்நுட்ப பிரிவில் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் பற்றிய விபரங்கள்.*
1️⃣Engineering Technology Stream
🔥பரீட்சைக்கு தோற்றியோர் 19,715
🔥பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி 12.243
🔥பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்தவர் தொகை 6,331
🔥பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்ய
பட்டவர்கள் தொகை 2.236
🔥இதன் சதவீதம் 18.3%
2️⃣Biosystems Technology Stream
🔥பரீட்சைக்கு தோற்றியோர் தொகை 10,203
🔥பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற தொகை 6,857
🔥பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்தவர் தொகை 4,300
🔥பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள் தொகை. 1,543
🔥இதன் சதவீதம் 22.5%
திரு.ந.சந்திரகுமார்
மட்டக்களப்பு களுதாவளை
05.12.2022