கூகுள் இணைத்தளம் நேற்றிரவு செயலிழந்த்தாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளில் கூகுள் தேடுதலின் போது error என முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், பிற வலைத்தளங்களான Gmail மற்றும் YouTube போன்ற பிற Google பயன்பாடுகள் பாதிக்கப்படவில்லை.
இரவு 9:09 மணியளவில் ஆரம்பமான இந்த செயலிழப்பு, இரவு 9:40 மணியளவில் முற்றாக இணையத்தளம் செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இரவு 10:30 மணியளவில் பெரும்பாலும் சிக்கல் தீர்க்கப்பட்டதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கூகுள் சேர்வர் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தின் காரணாமாக இந்த செயலிழப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.