தேசிய கல்வியியல் கல்லூரி விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் – வழிகாட்டல்கள்

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் – 2021(2022)

பாடநெறியைத் தெரிவு செய்ய முன்னர், வர்த்தமானியை முழுமையாக வாசியுங்கள். (பாடநெறி தெரிவு தொடர்பாக வழிகாட்டல்கள் தனியாக வழங்கப்படும்) வர்த்தமானி அறிவித்தலைப் பெற இங்கே க்லிக் செய்யுங்கள்

இங்கு தரப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டமும் ஸ்க்ரீன் சொட் இலக்கமிடப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளன.

 1. டெஸ்க்டொப் அல்லது லெப்டொப் இனைப் பயன்படுத்தி இதனை தொடருங்கள். கைத்தொலைபேசியைப் பயன்படுத்தும் போது கூகுள் குரோம் ஓப்பன் செய்து Desktop Mode இற்கு மாற்றிக் கொள்ளுங்கள். பின்வரும் இணைப்புக்குச் செல்லுங்கள். https://ncoe.moe.gov.lk/ncoe/
 2. முதலில், சரியான தகவலை வழங்க ஒப்புக்கொள்கிறேன் என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு உயர் தரம். (A/L) 2019/2020 என்பதைக் கிளிக் செய்து தொடரவும்.
 3. பின்னர் உங்கள் A/L பரீட்சைக்கான சுட்டெண்ணை உட்செலுத்துங்கள். A/L எழுதிய ஆண்டு, பாடத்திட்டம் பழையதா அல்லது புதியதா மற்றும் சுட்டெண் ஆகியவற்றைச் சரிபார்க்கவும்.
 4. பிறகு G.C.E. (O/L) க்குச் செல்லவும்.
 5. அதன் பிறகு, நீங்கள் O/L எத்தனை முறை எழுதினீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, அதனை செய்த ஆண்டுகளையும் அவ்வாண்டின் சுட்டிலக்கத்தையும் உட்செலுத்துங்கள். (இன்னொரு விஷயம், முதல் தடவை மாத்திரம் தோற்றியிருப்பின் ஒருமுறை என்றும் இரண்டாவது முறை எழுதியிருப்பின் இரண்டு முறை எனவும் குறிப்பிட்டு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான சுட்டிலக்கத்தை வழங்க வேண்டும். ஆங்கிலம் மாத்திரம் எழுதியிரப்பினுமு் அதுவும் இரண்டாவது தடவையாக கருதப்படும். submit செய்யவும்.
 6. அதன் பிறகு உங்கள் சாதாரணதர பெறுபேறு சரியாகக் காட்டப்பட்டுள்ளதா எனச் சரிபார்த்துவிட்டு அடுத்ததற்கு செல்லவும்.
 7. அதன் பிறகு ஸ்ரீபாதா கல்லூரிக்கு விண்ணப்பிக்கிறீர்களா இல்லையா என்பது கேட்கப்படும். ஆம்/இல்லை என்பதைத் தெரிவு செய்யவும் (உங்களுக்குத் தகுதி இல்லை என்றால், இல்லை எனக் கொடுங்கள்).
 8. பின்னர் 03 பாடநெறிகளைத் தேர்ந்தெடுக்க வரும். தேர்வு செய்யப்படும் பாடெநறிகள் வர்த்தமானியில் உள்ளன. வர்த்தமானியை மீண்டும் ஒருமுறை கவனமாகப் படியுங்கள்) விண்ணப்பத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஸ்கிரீன் ஷாட்டை இடுகிறேன். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 03 பாடநெறிகளை முன்கூட்டியே தீர்மானியுங்கள். உங்களுக்கு மிகவும் பொருத்தமான பாடநெறியை முதல் தெரிவாகவும் அடுத்த விருப்பத்திற்கு ஏற்ப தெரிவுகளையும் இடுங்கள்.
 9. உங்களுக்குப் பொருத்தமான மூன்று பாடநெறிகளை வைத்துக் கொள்ளுங்கள்.
 10. இப்போது உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கோரப்படும்.
 • Full Name
 • Name With Initials
 • Date Of Birth
 • Address
 • City
 • Postal Code
 • District
 • NIC/Gender/Miss or Mr/ Ethnity-sinhala or tamil/Mobile/Landline/Email

முதலான தகவல்களை சரியாக உட்செலுத்துங்கள்.

11. இப்போது மூன்று பெட்டிகள் தோன்றும். உங்கள் தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்த்து, பாடநெறிகளை சரிபார்க்கவும். மற்றும் சமர்ப்பிக்கவும். நீங்கள் என்ன பூர்த்தி செய்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து சமர்ப்பிக்கவும் என்று கூறி மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.
12 சமர்ப்பித்த பிறகு, PDF ஐ பதிவிறக்கம் செய்ய ஒரு பட்டன் உள்ளது, அதை கிளிக் செய்து பதிவிறக்கவும்.

13. பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பை எடுத்து நேர்முகத்தேர்வுக்காக வைத்திருக்க வேண்டும். அதன் விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.

அவ்வளவுதான். நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்கள்.

Teachmore
1
Teachmore
2
Teachmore
3
Teachmore
4
Teachmore
5
Teachmore
6
Teachmore
7
Teachmore
8
Teachmore
9
Teachmore
10
Teachmore
11
Teachmore
12
Teachmore
13

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!