NATIONAL FUEL PASS தேசிய எரிபொருள் அனுமதி அட்டை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் மற்றொரு தோல்வியடைந்த திட்டமாகிக் கொண்டிருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அறிமுகப்படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே எதிர்பாராதவிதமாக பயனர்கள் படை எடுத்ததன் காரணமாக பதிவுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சேர்வர் பிரச்சினை ஒரு புறமிருக்க OTP பெற்றுக் கொள்ளல் மற்றும் பதிவிடலிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதே நேரம் QR Code இல் வாகன இலக்கத்தை அடையாளப்படுத்திக் கொள்வது தொடர்பான பிரச்சினைகள் கொண்ட bug காணப்படுவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர.