National Fuel Pass அறிமுகப்படுத்தப்பட்டவுடன் அனைவரும் குறித்த இணையத்தளத்திற்கு பிரவேசம் செய்தமையால் குறித்த இணையத்தளம் முடங்கியது. பதிவு செய்வதற்கான யைப் பெற்றுக் கொள்ளவதற்கான முறைமை ஸ்தம்பித்தது. இது குறித்து பலரும் குற்றம் சாட்டினர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த முயற்சியில் தன்னால் குறித்த பதிவை மேற்கொள்ள முடியவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். செயலி விருத்தியாளர்கள் பலரும் இந்த முறைமையை விமர்ச்சித்திருந்தனர்.
இதற்கு பதிலளித்த, எரிசக்தி அமைச்சர் கான்ஞன, இந்த முயற்சிய இலவசமாக மேற்கொள்ளப்படுவதாகவும், அரசாங்கத்திற்கோ அல்லது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கோ எந்த வித செலவுகள் ஏற்படாமல் தன்னார்வ நிறுவனங்களினதும் ஐசிடிஏ நிறுவனத்தினதும் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது என்றார்.
எனினும் தற்போது குறித்த இணையத்தளதம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. இற்கும் வாகன இலக்கத்திற்கும் இடையில் காணப்பட்ட தொடர்பின்மை நீக்கப்பட்டுள்ளது. அத்தோடு இலகுவாக அனுக முடியுமான வகையில் சேவரின் கொள்ளளவு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
எனினும், மோட்டார் சைக்கிள் பதிவின் போது, வாகன செசி இலக்கம் பொருந்தவில்லை என்ற பிரச்சினை ஏற்படுவதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த முயற்சியை உடனடியாக நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவற்கு முன்னர், பரீட்சார்த்தமாக தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களில் மாத்திரம் பயன்படுத்தி அதன் பின்னர், மேலதிக விருத்தியை செய்து நாடு முழுவதும் அமுல்படுத்துமாறு தொடர்புடைய பல தரப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.