இன்று (31) பிற்பகல் நிலவரப்படி சுமார் 5 மில்லியன் வாகனங்கள் QR முறையை பதிவுசெய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் 95% பெட்ரோல் நிலையங்கள் இந்த QR முறையை பதிவுசெய்துள்ளதாக அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், QR குறியீட்டு முறையைப் பின்பற்றிய வாகனங்களில் மோட்டார் சைக்கிள்கள் முன்னணியில் உள்ளன. அவற்றின் தொகை 28 லட்சம் ஆகும்
சுமார் 09 இலட்சம் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏறக்குறைய 07 இலட்சம் கார்கள் QR குறியீட்டு முறையைக்கு பதிவுசெய்துள்ளன..