பாடசாலை வர முடியாத ஆசிரியர்கள் குறித்து புதிய சுற்றுநிருபம்
தற்போதைய நெரிக்கடிக்கு மத்தியில்
பாடசாலை வருகை தர முடியாத ஆசிரியர்களின் விடுமுறை தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட கல்வி அமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
முழு அரச சேவையையும் இரு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டாலும் கூட, கல்வி அமைச்சு பாடசாலைகள் இயங்க வேண்டும் என அறிவித்துள்ளது.
நகர்ப்புறப் பாடசாலைகளை மாத்திரம் மூடுவதற்கு தீர்மானக்கப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனூடாக பல பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கல்வி அமைச்சுக்கு சுட்டக் காட்டியதாக மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபர்கள், ஆசிரியர்களை அச்சுறுத்தி பாடசாலைக்கு வருமாறு அழைப்பதற்கு அதிகாரமில்லை என தெரிவித்த அவர், அதற்கான புதிய சுற்றறக்கை ஒன்றை வெளியிடுவதற்கு கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளமாகவும் அவர் குறிப்பிட்டார்
இன்று, ஆசிரிய அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடக சந்திப்பிலேயே இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.