தற்போதைய நெருக்கடி நிலமையில் பாடசாலை நாட்களை குறைப்பதற்கு எதிர்பார்ப்பு இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த அளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பது, ஆசிரியர்களை மூன்று நாட்கள் மாத்திரம் பாடசாலக்கு அழைப்பது என அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்திருந்தது.
ஆசிரிய தொழிற்சங்க பிரேரணைகளுக்கு ஜூன் 13 ஆம் திகதிக்கு முன்னர் பதிலளிப்பதாக, தொழிற்சங்கங்களுக்கு கல்வி அமைச்சர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.