🛑 ‘PhDs for Sale’: போலிக் கலாநிதிகளின் வெற்றிகரமான வணிகம்.
2022 செப்டெம்பர் 5 அன்று, ஒரு சிறிய தனியார் நிறுவனத்தின் Directorரான Samith Mapalagama (46) தனது Facebookஐ பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு message அவரது Inboxஇல் தோன்றியது. அனுப்பியவர் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் உள்ளூர் பிரதிநிதி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவரது செய்தி: “நாங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறோம். நீங்கள் ஒரு தொழில்முறையானவர் (professional) ஆக இருந்தால் நீங்கள் பட்டம் பெறலாம். அடுத்த பட்டமளிப்பு நவம்பர் 6, 2022 (இல்) தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறும். விலை 390,000 ரூபாய் மட்டுமே. இது உங்களின் வாழ்க்கைக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட தகைமையாகும்.”
என இருந்தது.
பதிப்பாசிரியர் விசாரித்தபோது அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள நிறுவனப் பதிவுகளின்படி, இங்கிலாந்தின் சசெக்ஸை தளமாகக் கொண்ட ஒரு முகவர் மூலம் பதிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களில் இந்தப் பல்கலைக்கழகமும் ஒன்று. மூன்று பல்கலைக்கழகங்களும் 2019 இல் நிறுவப்பட்டன – அவற்றில் இரண்டு ஒரே நாளில்.
Mapalagamaவினால் பெறப்பட்டதைப் போன்ற வலைவீசும் Messagesகள் இந்த போலி வர்த்தகத்திற்கு ஒரு சான்றாகும்:
அத்தகைய தகுதியைப் பெறுவதற்கு பல வருட முழுமையான ஆராய்ச்சி, தகைமை எதுவுமின்றி honorary doctorates and Doctor of Philosophy (PhD) பட்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆய்வு செய்து பார்த்ததில் உயர்கல்வி நிறுவனங்களாக நடத்துவதற்கு அங்கீகாரம் பெறாத தம்மை தாமே பல்கலைக்கழகங்கள் என அறிவித்துக்கொள்ளும் இந்தியா , நைஜீரியா, அமெரிக்க நாடுகளில் பதிவான போலி நிறுவனங்கள் என்பது புலனாகிறது.
இவர்கள் இப்போலியான கெளரவ பட்டங்களை வழங்க USD 62 முதல் USD 1200 வரை வசூலித்து பட்டமளிப்பு விழாக்களை நடத்துகின்றனர்.
சில இலங்கையர்கள் இந்த பட்டங்களுக்கு விருப்பத்துடன் பணம் செலுத்தும் அதே வேளையில், மதிப்பு அல்லது கெளரவ நோக்கங்களுக்காக இந்த ‘பல்கலைக்கழகங்கள்’ தொழில் வல்லுநர்களை அணுகி, அவர்களின் சுயவிவரத்தை உயர்த்துவதற்காக ஒரு பட்டத்தை வாங்கும்படி அவர்களை வற்புறுத்துகின்றன.
மேலும் சில சந்தர்ப்பங்களில் (நிறுவனங்களே) காசு வழங்கி ஒப்பந்தங்களும் செய்து உள்ளன.
கீழுள்ள WhatsApp தகவல் பரிமாற்றத்தில் , இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இருப்பதாகக் கூறும் ஒரு ‘பல்கலைக்கழகத்தின்’ நிறுவனர், 12 முதல் 15 நபர்களை தனது பல்கலைக்கழகத்தின் மூலம் INR 35,000 (USD 438) செலுத்தி டாக்டர் பட்டங்களை வாங்க Agent ஆக செயற்படுபவருக்கு 3 தொழில்முறை கலாநிதி பட்டங்களை உறுதியளிக்கிறார். , மற்றும் கத்தார் அல்லது அருகிலுள்ள நாட்டில் ஒரு பட்டமளிப்பு ஏற்பாடு செய்வதாகவும் கூறுகிறார்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் “பட்டமளிப்பு நிகழ்ச்சியின் விலை என்ன?” என பல்கலைக்கழக நிறுவனரிடம் கேட்டார், அதற்கு அவர், “நீங்கள் அதை ஒழுங்கமைக்க வேண்டும்” என்று பதிலளித்தார், டாக்டர் பட்டத்திற்கான விலை 50,000 ரூபாயாக (USD 626) உயர்த்தப்பட்டுள்ளது. காரணம் நிகழ்வு செலவுகளை ஈடுகட்ட மற்றும் “நிகழ்ச்சியை நடாத்த”.
🛑 ‘No online PhDs’
==================
கவுரவ டாக்டர் பட்டங்கள் விற்கப்படுவது போல், இந்தியாவில் இருந்து செயல்படும் பல நிறுவனங்கள் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்கு வெளியே உள்ள விண்ணப்பதாரர்களுக்கு online PhDகளை வழங்குகின்றன.
இது பற்றி கருத்து வெளியிட்ட இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரி ஒருவர் “Doctorate திட்டங்களுக்கு, நாங்கள் Onlineல் அல்லது தொலைதூரக் கற்றலை அனுமதிப்பதில்லை. இந்தியாவுக்கு வந்து அக்கற்கை நெறிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்,”
இருப்பினும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமொன்றை இரகசியமாக அணுகியபோது, 250 பக்க ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, 45 நாட்களில் INR 85,000 (USD 1065)க்கு PhD சான்றிதழை வழங்க முடியும் என்று கூறியது.
“நீங்கள் பின்தேதியிடப்பட்ட Phdஐயும் பெறலாம்” என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் வாட்ஸ்அப் செய்தியில் கூறினார். “நாங்கள் (சான்றிதழை) ஸ்பீட் போஸ்ட் அல்லது Courier மூலம் அனுப்புவோம்” எனவும் குறிப்பிட்டார்.
ஒரு முழுமையான Screeningக்கு பிறகு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்குவதற்கான பொதுவான நடைமுறைக்கு மாறாக, தனது பல்கலைக்கழகம் 30 நாட்களில் பட்டத்தை விற்க முடியும் என்றார். “ஐயாயிரம் (INR) மட்டுமே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயரைப் பகிரவும், ”என்று அவர் கூறினார்.
மற்றொரு ‘பல்கலைக்கழகம்’ விண்ணப்பதாரர் 300 பக்க ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து INR 40,000 (USD 500) செலுத்தியவுடன் PhD சான்றிதழை வழங்குவதாகக் கூறியது.
இவ்விரண்டு நிறுவனங்களும் உயர்கல்வி நிறுவனமாக இயங்குவதற்கு இந்தியாவின் India’s National Assessment and Accreditation Council இன் கட்டாய அங்கீகாரத்தைப் பெறவில்லை.
🛑 போலியான பல்கலைக்கழகத்தைக் கண்டறிதல்:
===========================
முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள பல ‘பல்கலைக்கழகங்கள்’ தங்கள் கல்வித் திட்டங்கள் அல்லது கல்விப் பணியாளர்கள் குறித்த போதுமான விவரங்களைத் தங்கள் இணையதளத்தில் வழங்கத் தவறிவிட்டன.
கிடைக்கக்கூடிய பெரும்பாலான உள்ளடக்கம் இலக்கணப் பிழைகளால் நிரம்பி இருந்தன. இந்த இணையதளங்களில் பெரும்பாலானவற்றில் போதுமான தொடர்பு விவரங்களும் இல்லை.
சிலர் தங்கள் பெயர்களில் ‘அமெரிக்கா’ மற்றும் ‘பிரிட்டிஷ்’ போன்ற சொற்களைச் சேர்த்து முறையான நிறுவனம் என காண்பிக்க முயற்சித்தாலும் அவர்கள் குறிப்பிடும் முகவரியில் அப்படி ஒரு இடமே இல்லை.
இந்த முகவரிகளில் சிலவற்றில் கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் தேடினால், அத்தகைய நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட விளம்பரப் பலகைகள் கூட இல்லாத வெற்றுக் கட்டிடங்கள், தெருக்கள் மற்றும் வெறும் நிலங்களின் முடிவுகள் கிடைத்தன.
ஒவ்வொரு நாட்டிலும் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் செயல்முறை மாறுபடும். அமெரிக்கா போன்ற நாடுகளில் அதற்காகவே தனியான commissions to accredit higher education institutions உள்ளன.
எவ்வாறாயினும், இந்த போலியான பல்கலைக்கழகங்களில் சில கமிஷன்களிடமிருந்து அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாக பாசாங்கு செய்கின்றன. அவ்வாறான நிலையில் அவை அத்தகைய செயல்முறைகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
அவர்களின் சட்டப்பூர்வ உரிமையை மேலும் அதிகரிக்க, அவர்கள் அடிக்கடி தங்கள் இணையதளத்தில் ISO 9001:2015 Logiவைக் காண்பிக்கிறார்கள் – இது வாடிக்கையாளர் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைகளை தொடர்ந்து வழங்கும் திறனை நிரூபிக்கும் தரநிலையாகும். ஆனால் இந்த Logo குறிப்பிட்ட வணிகமானது உயர்கல்வி நிறுவனமாகச் செயல்படுவதற்கு அங்கீகாரம் பெற்றதாகச் சான்றளிக்கவில்லை.
🛑 இலங்கையில் வெளிநாட்டு கல்வித் திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள்:
==========================
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களின் கல்வித் திட்டங்களை மட்டுமே மேற்பார்வையிடுவதால், இலங்கையர்களுக்கு அங்கீகரிக்கப்படாத உயர்கல்வித் திட்டங்களை நேரடியாகவோ அல்லது அவர்களின் உள்ளூர் நிறுவனங்களின் மூலமாகவோ வழங்கும் நிறுவனங்களை ஒடுக்குவதற்கு இலங்கை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை.
UGC அதன் இணையதளத்தில், காமன்வெல்த் பல்கலைக்கழகங்களின் ஆண்டு புத்தகம் ( Commonwealth Universities Yearbook) அல்லது பல்கலைக்கழகங்களின் சர்வதேச கையேட்டில் (International Handbook of Universities) பட்டியலிடப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களை அங்கீகரிப்பதாகக் கூறுகிறது.
ஆனால் அந்த அங்கீகாரம் சான்றிதழின் நம்பகத்தன்மையைக் குறிக்கவில்லை”. (but the recognition does not “indicate the authenticity of the degree certificate”). இது ஒரு வருங்கால இளங்கலை அல்லது முதுகலை பட்டதாரிகளுக்கு அத்தகைய நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மையை நிறுவும் பொறுப்பை அளிக்கிறது.
“உயர்கல்வி அமைச்சகம் உள்ளூர் தனியார் பட்டங்களை மட்டுமே மேற்பார்வை செய்கிறது. வெளிநாட்டு பட்டங்களை அல்ல” என்று உள்ளூர் தனியார் நிறுவனங்களைக் கண்காணிக்கும் உயர்கல்வி அமைச்சின் அரசல்லாத உயர்கல்விப் பிரிவின் ( Non-State Higher Education Division) உதவிப் பணிப்பாளர் K.T.S. Wijesiriwardena தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வித் திட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாகவும், அதன் பின்னர் இந்த விடயங்களை ஆராய ஒரு ஆணைக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
“ஆனால் அது சிறிது காலம் எடுக்கும்,” என்றும் அவர் கூறினார்.
Mapalagama கௌரவ கலாநிதிப் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பை நிராகரித்திருந்தாலும், இன்னும் பலர் அத்தகைய பட்டங்களை தொடர்ந்து கோருகின்றனர்.
“வெளிநாட்டு கல்வித் துறையில் உள்ள முறைகேடுகள் சமூகத்தின் நல்வாழ்வை அச்சுறுத்துகின்றன, ஏனெனில் அது சமூக நம்பிக்கையை சிதைக்கிறது. மேலும் சமத்துவமின்மையை மோசமாக்குகிறது. எனவே, இந்த அபாயங்களைத் தணிக்க முறையான அமைப்பைக் கொண்டிருப்பது அவசியம்,” என்று Mapalagama குறிப்பிட்டார்.
இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க சரியான பொறிமுறை அமைக்கப்படும் வரை, டாக்டர் பட்டங்களை விற்கும் வணிகம் பட்டப்பகலில் தொடர்ந்து செழித்து வளர்ந்து, கல்வி உலகில் ஏராளமான கவலைகளுக்கு வழி வகுக்கும்.
நன்றி: roar media
Written By: Hassaan Shazuli
தமிழில்: Ziyad Aia