கற்றல் கற்பித்தல் சூழலை உறுதி செய்வோம்.

TeachMore | தற்போது ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து மற்றும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் இன்றைய நாட்களில் பாடசாலை கட்டமைப்பை இருக்கும் வளங்களைப் (மனித, பௌதீக, நேர) பயன்படுத்தி, மாணவர்களின் கற்றல் சூழலைப் பாதுகாப்பது ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தின் கடமையாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.

இப்பின்னணயில் மாணவர்களின் கற்றலை உறுதிப்படுத்துவதற்கும் எம்மால் முன்னெடுக்கக் கூடிய சில நடவடிக்கைகள் ஆலோசனைகளாக:

  1. ஒரு வாரத்திற்குரிய மாணவர்களின் கற்றலுக்குரிய மேலதிக செயற்பாடுகளை பாடசாலையின் பகுதித் தலைவருக்கு அல்லது வகுப்பாசிரியருக்கு ஒப்படைத்தல். இது ஆசிரியர் பாடசாலை வருகை தர முடியாத சந்தர்ப்பத்தில் பயன்படுத்த உதவியாக அமையும்.
  2. குறிப்பிட்ட பாடசலை அமைந்திருக்கும் ஊரில் உள்ள ஆசிரியர்கள், பட்டதாரிகள், தற்போது பல்கலைக்கழகத்தில் மற்றும் கல்லூரிகளில் கற்போர் இருப்பின் அவர்களின் ஒத்துழைப்புக்களை தன்னார்வ அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் அதிக பட்சம் பெற்றுக்கொள்ளல்.
  3. கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட மாணவர்களின் வகுப்பு, பாட ரீதியான வட்சப் குழுக்களை இயக்க வைத்தலும் அதன் ஊடாக முடியுமான பாடங்களுக்குரிய வழிகாட்டல்களை வழங்குதலும். பெற்றோர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவ சங்கங்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் சுய கற்றல், வீட்டில் கற்றல் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கி மாணவர்களுக்கு வீட்டில் செய்வதற்குரிய Home work திட்டகளை முறையாக வழங்க முடியும்.
  4. ஒரே பிரதேசத்தில் உள்ள மாணவர்களை வீட்டில் இணைந்து குழுவாக கற்பதற்கு (home based learning) வழிப்படுத்தல் (பெற்றோர்ரின் மேற்பார்வையில்)
  5. தேசிய கல்வி நிறுவனத்தின் மூலம் நடாத்தப்பட்ட குருகெதர நிகழ்ச்சி யுடியுப் தளத்தில் அனைத்து வகுப்புக்களுக்குமுரிய வீடியோ இணைப்புக்கள் காணப்படுகிறன. முதலாம் இரண்டாம் தவைணக்குரிய வீடியோ இணைப்புக்களை மாணவர்ளுக்கு அனுப்பி பாடத்தை கற்பதற்குரிய ஒழுங்குகளை செய்துகொடுத்தல்
  6. சில மாணவர்கள் உணவு நெருக்கடி, ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பின் அவர்களை இனங்கண்டு பாடசாலையின் ஒழுங்குகளுக்கு ஏற்ப பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ( Ex..food rack, a food parcel for my friend)
  7. ஆரம்ப பிரிவு மாணவர்களின் வகுப்புக்கள் மற்றும் தேசிய பரீட்சைக்கு முகங்கொடுக்க இருக்கும் மாணவர்களின் விடயங்களில் அதிக கவனம் செலுத்துதல் (அலகுப் பரீட்சை, தேர்ச்சி மட்ட கருத்தரங்கு, அலகு ரீதியான ஒப்படை, Mind Map தயாரிப்பு…)
  8. பாடசாலை மாணவர்களின் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு நாள் காலையிலும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் சிந்தனைகளை குறைந்தது 15 நிமிடமாவது வழங்குதல் (ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாகவும் நடத்ததலாம்) அத்தோடு அதிபர், ஆசிரியர்களுடனும் பாடசாலையின் ஏனைய பயனாளிகளுடனும் கலந்துரையாடல்களை நடாத்துதல்
  9. பாடசாலையின் வசதிகளுக்கு ஏற்ப பாடசாலை மட்ட இணைப்பட விதானச் செயற்பாடுகளை முறையாக நடாத்துதல் (மாணவர் மன்றம், கலை நிகழ்ச்சிகள், மைதான நிகழ்ச்சிகள்,Indoor games, Home garding)
  10. பாடசாலை சூழலில் அவநம்பிக்கையான சிந்தனைகளை அதிருப்திகளை பேசுபெரருளாக அமைவதை விடவும் நம்பிக்கையை, தைரியத்தை மாணவர்கள், சக ஆசிரியர்களுடன் பரிமாறிக்கொள்வது எமது பணிக்கு உந்துதலாய் அமையும்

ஆசிரியர்கள் மாணவர்களின் முன்னோடி என்ற வகையில் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த அவல நிலையில் எமது மாணவ சமூகத்திற்கு அதிக பட்சம் தேவைகளை தொடர்ந்தும் மேற்கொள்வோம். அது எமது குடும்பம், ஆரோக்கியம், பொருளாதார விடயங்களில் அருள்களைப் பெற்றுத்தரும்.

அத்தோடு இந்த பதிவின் கீழ் உங்களது நேர்மைய சிந்தனைகளை(positive thinking) பரிமாறிக்கொள்ளுங்கள். அனர்த்த சூழலில் பாடசாலையில் மேற்கொள்ள முடியுமான பிரத்தியே திட்டங்களை முன்வையுங்கள், சிந்தியுங்கள், பரிமாறுங்கள் அது ஆசிரிய சமூகத்தை இன்னும் ஊக்குவிப்பதாய் அமையும்.

TeachMore.lk

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!