வாழ்க்கைச் செலவுக்கு சம்பளம் போதுமானதாக இல்லை – ஜோஸப் ஸ்டாலின்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டணி இன்று சம்பள ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்துள்ளது. சம்பள அதிகரிப்பைக் கோரியே கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது மூன்று விடயங்களை மையப்படுத்தி கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக கூட்டணி அறிவித்துள்ளது.
- 1997 ஆம் ஆண்டு முதல் நிலவும் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பான இதுவரை சம்பள ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காமை
- பேராட்டம் காரணமாக சம்பள முரண்பாட்டில் 1ஃ3 பங்கை வழங்கியபின்னணியில், ஏனைய பகுதிகளை வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு பரிந்துரையை அனுப்புதல்
- அனைவரும் கஸ்டத்தை அனுபவிப்பதால், அனைத்து அரச ஊழியர்களுக்கும் கொடுப்பனவு மேற்கொள்ள வேண்டு்ம்
வாழ்க்கைச் செலவோடு ஒப்பிடும் போது தற்போதைய சம்பளம் போதுமானதாக இல்லை என இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு மாத்திரமன்றி அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்படல் வேண்டும் என அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.