எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி அனுராதபுரம் மாநகர சபைக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அனுராதபுரம் நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் அதிபர் ஒருவருக்கு சேவையைத் தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்தமைக்காக குறித்த அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்யாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டத்தின்படி, அரசாங்கப் பணியில் உள்ள பணியாளர் நிறைவேற்றுத் தரநிலை அதிகாரி ஒருவர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டால், அவர் வேட்புமனுவைச் சமர்ப்பிப்பதற்கு முன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எனினும் இந்த அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்யாமல் புதிய வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக கடந்த 8ஆம் திகதி அனுராதபுரம் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் முறைப்பாடு கிடைத்துள்ளது.
இது தொடர்பான முறைப்பாட்டினை ஆராய்ந்த வடமத்திய மாகாண கல்வி திணைக்களம், குறித்த அதிபரின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ඉදිරි පළාත් පාලන මැතිවරණයේදී ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ නියෝජනය කිරීමට නාමයෝජනා භාරදුන් අනුරාධපුර ප්රධාන පාසලක විදුහල්පතිවරයෙකුට සේවය කිරීම තහනම් කර තිබෙනවා. උතුරුමැද පළාත් අධ්යාපන දෙපාර්තමේන්තුව විසින් මෙම තහනම පනවා ඇත.
පළාත් පාලන මැතිවරණය සඳහා නාමයෝජනා පත්ර භාරදීම සඳහා විදුහල්පතිවරයා තම ඉල්ලා අඅස්වීමේ ලිපිය බාර නොදීම හේතුවෙන් වැඩ තහනම් කර ඇති බව වාර්තා වේ.
මැතිවරණ පනතට අනුව රජයේ සේවයේ විධායක නිලධාරියකු අපේක්ෂකයකු ලෙස මැතිවරණයකට ඉදිරිපත් වන්නේ නම් නාමයෝජනා භාරදීමට පෙර එම තනතුරෙන් ඉල්ලා අස්විය යුතුය. කෙසේ වෙතත් මෙම විදුහල්පතිවරයා සිය ධූරයෙන් ඉල්ලා අස් නොවී නාමයෝජනා භාරදී ඇති බවට අනුරාධපුර දිස්ත්රික් මැතිවරණ කාර්යාලයට පසුගිය 08 වනදා පැමිණිල්ලක් ලැබී තිබෙනවා.
උතුරුමැද පළාත් අධ්යාපන දෙපාර්තමේන්තුව පැමිණිල්ල විභාග කර වහාම ක්රියාත්මක වන පරිදි විදුහල්පතිවරයාගේ සේවය අත්හිටුවීමට කටයුතු කර ඇති බව වාර්තා වේ.