இன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கோட்ட 27 பாடசாலைகளின் ஆசிரியர்கள் அதிபர்கள் ஆரம்பத்தில் ஈடுபட்டனர்
தங்களுத் தேவையான எரிபொருளினை (பெற்றோல்) பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு கவனீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு முன்னால் இருந்து ஆரம்பித்து ஓட்டமாவடி சுற்றுவட்ட மையம் வரை சென்றது. இதன் போது தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஆசிரியர்கள் ஏந்தினர்.
பின்னர் ஓட்டமாவடி பிரதேச செயலகம், வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தின் தவிசாளர்கள் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் வரவழைக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது பெற்றோல் வந்தால் அதனை வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது.
இதனையடுத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.
அப்படி வந்தும் பெற்றோல் வழங்காவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஆசிரியர்கள் அதிபர்கள் சார்பாக முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
நன்றி அஷ்ரப் அலி சேர்