தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர National Fuel Pass முறையில் பதிவு செய்து QR Code இனை பெற்றக் கொள்வதற்கு தற்பொழுது புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய வசதிகளின் படி,
ஒரு வாகன பாவனையாளர் தமது வாகனத்தினை பதிவு செய்யும் போது வாகன அடிச்சட்ட இலக்கத்திற்கு (Vehicle Chassis Number) பதிலாக தாம் பெற்றுக் கொண்ட வரி அனுமதிப் பத்திர இலக்கத்தினை(Vehicle Tax Number) உள்ளீடு செய்ய முடியும்.
பல வாகன பாவனையாளர்கள் தமது வாகங்களை பதிவு செய்யும் போது தமது வாகன அடிச் சட்ட இலக்கங்களை உள்ளீடு செய்யும் பொது வாகன இலக்கமும் அடிச்சட்ட இலக்கமும் பொருந்தவில்லை(Not Matching) என வருவதால்,
பல வாகன பாவனையாளர்கள் இந்த முறையில் பதிவு செய்ய முடியாமல் இருந்தனர். ஆனால் தற்பொழுது தமது வரி அனுமதிப் பத்திர இலக்கத்தை உள்ளீடு செய்து தமது வாகனங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.