2022 ஆம் ஆண்டு (2021கல்வியாண்டின்)உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குழுவொன்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பிலும், அதற்கு நீதி வழங்குமாறும் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அக்கடிதத்தில் உயர்தரப் பரீட்சை நடாத்தப்பட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டு மீண்டும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான காலப்பகுதி தொடர்பில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை தோற்ற உள்ளவர்களுக்கு அதற்கான தயாராவதற்கு போதிய காலப்பகுதி வழங்கப்படல் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இம்மாதம் இறுதியளவில் பெறுபேற்றை வெளியிட்டு, வரும் டிசம்பரில் பரீட்சையை நடாத்துவத் ஊடாக தமக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 3 மாதங்கள் மாத்திமே கிடைப்பதாக அவர்கள் முறையிட்டுள்ளனர்.
இதற்கு முன்னர், பரீட்சை முடிவுகள் வெளியான பிறகு 7 மாதங்களுக்கு மாணவர்கள் இரண்டாவது முறையாக பரீட்சைக்குத் தோற்றுவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர்கள் தமக்கும் குறைந்தது ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.