பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வௌியிட மாணவர்களது பாடசாலை காலம் தொடர்பான தகல்களை வழங்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் தமிழாக்கம் வருமாறு
2021/2022_கல்வி ஆண்டு பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளிகளை வெளியிட விண்ணப்பதாரர்களின் பாடசாலைக் காலம் பற்றிய தகவல்களைப் பெறுதல்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, விண்ணப்பதாரர்கள் உயர்தரத்திற்கு தோற்றிய பாடசாலையின் அதிபரால் சான்றளிக்கப்பட்ட அவர்களின் பாடசாலை வருடங்கள் பற்றிய தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளிகளை வழங்குவதில், பல்கலைக்கழக அனுமதிக்கு பரிசீலிக்கப்பட வேண்டிய மாவட்டத்தை தீர்மானிக்கிறது.
எனவே, இலங்கை பரீட்சை திணைக்களமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இணைந்து பாடசாலை விண்ணப்பதாரிகளின் பாடசாலைக் காலம் குறித்த தகவல்களை அதிபர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையாக பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளிகள் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தும் நோக்குடன் இதனை மேற்கொள்கிறது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://onlineexams.gov.lk/eic) உங்கள் பாடசாலையில் 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை விண்ணப்பதாரிகளின் பிரதிகளை உங்கள் பாடசாலைக்குச் சொந்தமான கணக்கில் உள்நுழைந்து அந்த விண்ணப்பதாரர்களின் தொடர்புடைய தகவல்களைப் பூர்த்தி செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தகவல்களை பூர்த்தி செய்வது தொடர்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பல்கலைக்கழக அனுமதி திணைக்கள அதிகாரிகளை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
071-6337204/ 070-1565705/ 071-6337192/ 070 1565708/ 070-1298077
இந்த கடுமையான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியிலும், கல்வி அமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் 2021/2022 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவு வெட்டுப் புள்ளிகளை தாமதமின்றி வெளியிடுவதற்கு முயற்சித்து வருகின்றன, மேலும் அந்த தேசிய பணிக்கான உங்கள் ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
இறுதித்திகதி 15 ஆகஸ்ட் 2022