அரசியல்வாதியொருவருக்கு எதிராக, தமது பேஸ்புக்கில் பதிவேற்றிய ஆசிரியரொருவர், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பிரதேச அரசியல் வாதிக்கு எதிராக பதிவிட்டமையால் ஊவா மாகாண கல்விச்செயலாளரினால் இந்த சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, குறித்த அரசியல்வாதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, அதனடிப்படையில், ஆசிரியருக்கு எதிராக பதுளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த சேவை இடைநிறுத்தம் சட்டவிரோதமானதாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசியல் காரணங்களினால் இந்த ஆசிரியரின் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும். இச் செயற்பாட்டிற்கு எதிராக, தொழிற்சங்க நடவடிக்கைளை விரைவில் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.