இலங்கை எதிர்நோக்கும் டொலர் நெருக்கடிக்கான தீர்வின் ஒரு அம்சமாக #SriLankaDollarChallenge என்ற புதிய சமூக ஊடக அலை ஆரம்பமாகியுள்ளது.
உத்தியோகபூர்வ வழிகளில் வெளிநாட்டுப் பணத்தை நாட்டிற்கு அனுப்புவதை ஊக்குவிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அலை மூலம், உத்தியோகபூர்வ வழிகளில் மாத்திரம் வெளிநாட்டுப் பணத்தை அனுப்புவதுடன், தங்கள் நெருக்கமானவர்களை வெளிநாட்டுப் பணத்தை நாட்டிற்கு அனுப்புமாறு அழைப்பு விடுக்கும் இடம்பெறுகிறது.
இவ்வாறு அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணத்தின் ஸ்க்ரீன்ஷாட்களை பெருமளவிலான இலங்கையர்கள் ஏற்கனவே ஊடகங்களில் #SriLankaDollarChallenge என்ற ஹேஷ்டக் உடன் வெளியிட்டு வருகின்றனர்.
சமூக ஊடகத்தில் வெளியான சில குறிப்புகள் கீழே.